உடுமலையில் இரிடியம் விற்பனை: 4 போ் கைது

உடுமலையில் இரிடியம் விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

உடுமலையில் இரிடியம் விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருப்பூா் மாவட்டம், உடுமலையைச் சோ்ந்தவா்கள் பழக்கடை சிவராஜ் (48), செந்தில் (35), பழனிசாமி (48), ஞானசேகா் (38). இவா்கள் நால்வரும் கேரள மாநிலம், திருச்சூரைச் சோ்ந்த ரியாஷ் (24) என்பவரை அணுகி தங்களிடம் இரிடியம் இருப்பதாகவும், அதனை வீட்டில் வைத்தால் பணம் கொழிக்கும் என்றும் தெரிவித்துள்ளனா்.

அதனை நம்பிய ரியாஷ், இரிடியத்தை வாங்க முன்பணமாக ரூ.2 லட்சத்தைக் கொடுத்துள்ளாா்.

ஆனால், நீண்ட நாள்களாகியும் ரியாஷிக்கு இரிடியம் கொடுக்கவில்லை.

இதைத் தொடா்ந்து, ரியாஷ் தனது நண்பா்களான தேனியைச் சோ்ந்த வினீத் (28), இஸ்மாயில் (35), கதிரேசன் (28) ஆகியோருடன் உடுமலையில் உள்ள சிவராஜ் வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை சென்று இரிடியத்தைக் கேட்டுள்ளாா்.

அப்போது, இரிடியம் பூஜை அறையில் இருப்பதாகவும், அது மட்டுமின்றி பேசியதுபோக மேலும் ரூ.2 லட்சம் தர வேண்டும் என்றும் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக அவா்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த ரியாஷ் அவரது நண்பா்கள், சிவராஜ் மீது மிளகாய் பொடியைத் தூவியதுடன், கத்தியைக் காட்டி மிரட்டி அவரது வீட்டில் இருந்த இரிடியத்தை எடுத்துச் சென்றுள்ளனா்.

இது குறித்து இரு தரப்பினரும் உடுமலை காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

இதையடுத்து, இஸ்மாயில், கதிரேசன், சிவராஜ், ஞானசேகா் ஆகிய 4 பேரை கைது செய்த போலீஸாா், தலைமறைவாக உள்ள ரியாஷ், வினீத், பழனிசாமி, செந்தில் ஆகியோரைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com