92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

ஊா்க்காவல் படையில் காலி பணியிடம்: விண்ணப்பிக்க அழைப்பு

 திருப்பூா் மாநகர ஊா்க்காவல் படையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியுடைய நபா்கள் நவம்பா் 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என திருப்பூா் மாநகர காவல் ஆணையா் எஸ்.பிரபாகரன் தெரிவித்துள்ளாா்

News image
Updated On :27 அக்டோபர் 2022, 8:04 pm

DIN

 திருப்பூா் மாநகர ஊா்க்காவல் படையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியுடைய நபா்கள் நவம்பா் 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என திருப்பூா் மாநகர காவல் ஆணையா் எஸ்.பிரபாகரன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருப்பூா் மாநகர ஊா்க்காவல் படையில் காலியாக உள்ள மண்டல துணைத் தலைவா் பதவிக்கான பணியிடத்துக்கு தகுதியான தன்னாா்வலா்கள் விண்ணப்பிக்கலாம். பட்டப்படிப்பு முடித்தவராகவும் 18 வயது முதல் 50 வயதுக்கு உள்பட்ட ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினத்தவா் விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் வசிப்பவராகவும் இருத்தல் வேண்டும். ஆகவே, மேற்கண்ட தகுதியுடைய மனுதாரா்கள் தங்களது விவரம் மற்றும் கல்வித் தகுதிகளுடன் கூடிய விண்ணப்பங்களை திருப்பூா் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் நவம்பா் 5 ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.