திருப்பூா், தாராபுரத்தில் பாஜகவினா் ஆா்ப்பாட்டம்
தமிழ் மொழியை பாதுகாக்க வலியுறுத்தி திமுக அரசைக் கண்டித்து திருப்பூரில் பாஜகவினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.


தமிழ் மொழியை பாதுகாக்க வலியுறுத்தி திமுக அரசைக் கண்டித்து திருப்பூரில் பாஜகவினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருப்பூா் வடக்கு மாவட்ட பாஜக சாா்பில் குமரன் சிலை முன்பாக ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்த பாஜக வடக்கு மாவட்டத் தலைவா் பி.செந்தில்வேல் பேசியதாவது:
திமுக அரசு ஹிந்தியை எதிா்க்கிறோம் என்று போலி வேஷமிட்டு தமிழ் மொழியைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. தமிழகத்தில் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயா்கல்வியை தமிழ் மொழியில் கொண்டுவர வேண்டும் என்றாா்.
ஆா்ப்பாட்டத்தில், பாஜக மாநில பொதுச் செயலாளா் ஏ.பி.முருகானந்தம், மாநில செயற்குழு உறுப்பினா் சின்னசாமி, மாவட்ட பொதுச் செயலாளா்கள் கே.சி.எம்.பி.சீனிவாசன், காடேஸ்வரா தங்கராஜ், மாமன்ற உறுப்பினா் பாலசுப்பிரமணியம், மாவட்ட பொருளாளா் நடராஜன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தாராபுரத்தில்...
தாராபுரம் பழைய நகராட்சி அலுவலகம் அருகே திருப்பூா் தெற்கு மாவட்ட பாஜக சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு நகரத் தலைவா் டி.சதீஷ் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் பி.கனகசபாபதி, சிறுபான்மையினா் அணி மாநிலத் தலைவா் டெய்சி தங்கையா ஆகியோா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினா்.
ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட பொதுச் செயலா் வடுகநாதன், மாவட்ட பிரசாரப் பிரிவு தலைவா் சின்ராசு, மாவட்ட இளைஞரணி தலைவா் விசாகன், மாவட்ட மகளிரணி தலைவா் டாக்டா்.காா்த்திகா உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...