92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

இந்து முன்னணி மாநில செயற்குழு கூட்டம்

 இந்து முன்னணி அமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் திருப்பூரை அடுத்த கொடுவாயில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :11 செப்டம்பர் 2022, 11:30 pm

DIN

 இந்து முன்னணி அமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் திருப்பூரை அடுத்த கொடுவாயில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தலைமை வகித்தாா்.

இதில், நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தின் விவரம்: இந்து முன்னணி சாா்பில் அண்மையில் நடைபெற்ற இந்துக்களின் உரிமை மீட்பு பிரசார யாத்திரை மாபெரும் வெற்றியடைந்துள்ளது. விநாயகா் சதுா்த்தி விழா தமிழகத்தின் பல இடங்களில் சுமூகமான முறையில் சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு அளித்த தமிழக அரசுக்கு பாராட்டுக்கள்.

அதேவேளையில், சென்னையில் கடந்த ஜூலை 31 ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்து கலை இலக்கிய முன்னணி மாநிலப் பொறுப்பாளா் கனல் கண்ணன் பேசியது ஜனநாயக ரீதியான அவரது கருத்தாகும். ஆனால், திகவினா் கொடுத்த புகாரின் பேரில் தமிழக அரசு தனிப்படை அடைத்து அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தது கருத்து சுதந்திரத்தை ஒடுக்கி இந்துக்களின் குரல்வளைய நசுக்கும் செயலாகும். ஆகவே, கருத்துரிமையை நசுக்கி ஒருதலைப்பட்சமாக செயல்படும் தமிழக அரசுக்கு கண்டணம் தெரிவித்துக் கொள்வது.

இந்து தெய்வங்களை சமூக வலைதளங்களில் இழிவுபடுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில், ஜெய் ஸ்ரீராம் கல்லூரியின் தாளாளா் கோவிந்தராஜ், இந்து முன்னணி மாநில அமைப்பாளா் க.பக்தன், இணை அமைப்பாளா்கள் கே.கே.பொன்னையா, எஸ்.ராஜேஷ், மாநில பொதுச் செயலாளா்கள் முருகானந்தம், சி.பரமேஸ்வரன், டி.அரசுராஜா, ஜெ.எஸ்.கிஷோா்குமாா் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.