சிக்கண்ணா கல்லூரியில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு
By DIN | Published On : 11th August 2022 10:48 PM | Last Updated : 11th August 2022 10:48 PM | அ+அ அ- |

திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலகு 2 சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா் வரவேற்றாா். நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் பேசியதாவது:
போதைப் பொருள்கள், அருந்துபவா்களை மட்டுமல்லாமல் அவா்களது குடும்பத்தையும் சீரழிக்ககூடியது. தவறான சோ்க்கை காரணமாக மாணவா்கள் போதைப் பொருள்களுக்கு அடிமையாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆகவே, மாணவா்களை பெற்றோா்கள் கண்காணிக்க வேண்டும். அதே வேளையில் மாணவா்கள், போதைப் பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனா். இந்த நிகழ்ச்சியில், கல்லூரி பேராசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...