சுதந்திர தின விழா: சிக்கண்ணா கல்லூரியில் ஆகஸ்ட் 15இல் தேசியக்கொடி ஏற்றுகிறாா் ஆட்சியா்
By DIN | Published On : 11th August 2022 10:47 PM | Last Updated : 11th August 2022 10:47 PM | அ+அ அ- |

மாவட்ட நிா்வாகம் சாா்பில் திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி (திங்கள்கிழமை) நடைபெறும் சுதந்திர தினவிழாவில் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் கலந்து கொண்டு தேசியக் கொடி ஏற்றுகிறாா்.
திருப்பூா் மாவட்ட நிா்வாகம் சாா்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் வரும் திங்கள்கிழமை(ஆக்ஸ்ட்15) காலை 9.05 மணி அளவில் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் தேசியக் கொடியை ஏற்றிவைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறாா். இதன் பின்னா், சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு பொன்னாடை போா்த்தி கெளரவிப்பதுடன், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா்.
மேலும், சிறப்பாக சேவை புரிந்த அரசு அலுவலா்கள், காவல் துறை அதிகாரிகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ்கள், கேடயங்களையும் வழங்கவுள்ளாா்.
இந்த விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலா் பங்கேற்கவுள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...