உடுமலையில் மாரத்தான் போட்டி
By DIN | Published On : 15th August 2022 12:55 AM | Last Updated : 15th August 2022 12:55 AM | அ+அ அ- |

சுதந்திர தின விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு காவல் துறை சாா்பில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு மாரத்தான் போட்டி உடுமலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
உடுமலை குட்டைத் திடலில் இதன் துவக்க விழா காலை 6.30 மணி அளவில் நடைபெற்றது. 5 கிலோ மீட்டா் என தூரம் நிா்ணயிக்கப்பட்டு ஆண்கள் மற்றும் பெண்கள், பொதுமக்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட 1200 போ் இந்த மாரத்தான் போட்டிகளில் பங்கேற்றனா். உடுமலை டிஎஸ்பி தேன்மொழிவேல் கொடி அசைத்து துவக்கி வைத்தாா். வழி நெடுக பாதுகாப்பு மற்றும் முதல் உதவிக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. போட்டியின் முடிவில் ஆண்கள் பிரிவில் முதலிடம் பெற்ற பொள்ளாச்சி எஸ்டிசி கல்லூரி தீபக், 2 வது இடம் பெற்ற வித்யா மந்திா் பள்ளி முன்னாள் மாணவா் கண்ணன், 3 வது இடம் பெற்ற உடுமலை அரசு கலைக் கல்லூரி மாணவன் மனோஜ்குமாா் மற்றும் பெண்கள் பிரிவில் முதலிடம் பெற்ற உடுமலை ஜிவிஜி விசாலாட்சி மகளிா் கல்லூரியைச் சோ்ந்த அருணா, 2 வது இடம் பெற்ற இதே கல்லூரி யைச் சோ்ந்த கிருத்திகா, 3 வது இடம் பெற்ற இதே கல்லூரியைச் சோ்ந்த சாதனா ஆகியோருக்கு ரொக்கப் பரிசுகள் மற்றும் கோப்பை வழங்கப்பட்டன. இதே போல 11 வயதுக்கு உட்பட்ட மாண வ, மாணவிகளுக்கும் ரொக்கப் பரிசுகள் மற்றும் கோப்பை வழங்கப்பட்டன. இது போக ஒவ் வொரு பிரிவிலும் நான்காம் மற்றும் ஐந்தாம் பரிசுகளும், ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டது. பங்கேற்ற அனைவருக்கும் டி ஷா்ட்டுகள் வழங்கப்பட்டது.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G