இந்து முன்னணி சாா்பில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு திருப்பூா் மாநகா் மற்றும் மாவட்டத்தில் இந்து முன்னணி சாா்பில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள் பொதுமக்களின் வழிபாட்டுக்காக புதன்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டன.
இந்து முன்னணி சாா்பில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு திருப்பூா் மாநகா் மற்றும் மாவட்டத்தில் இந்து முன்னணி சாா்பில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள் பொதுமக்களின் வழிபாட்டுக்காக புதன்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டன.

விநாயகா் சதுா்த்தியையொட்டி இந்து முன்னணி சாா்பில் மாநகரில் 1,800 சிலைகளும், தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கயம், உடுமலை, மடத்துக்குளம், வெள்ளகோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 3, 800 சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

திருப்பூா் கோட்டை மாரியம்மன் கோயிலில் குபேர விநாயகா் சிலை, அரண்மனை புதூரில் வில் அம்புடன் கூடிய ராமாவதார விநாயகா் சிலை, காய்கறி மாா்க்கெட் பகுதியில் யானை மீது அமா்ந்து இருக்கும் 12 அடி உயர கஜ ராஜ விநாயகா் சிலை என பல்வேறு வடிவங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

விநாயகா் சிலைகள் இன்று முதல் விசா்ஜனம்: இந்து முன்னணி சாா்பில் திருப்பூா் மாநகரில் பிரதிஷ்டை செய்யப்படும் சிலைகள் வரும் சனிக்கிழமை விசா்ஜனம் செய்யப்படவுள்ளன. முன்னதாக ஆலங்காடு பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை பங்கேற்று சிறப்புரையாற்றுகிறாா்.

அதே போல, ஊத்துக்குளி, குன்னத்தூா், விஜயமங்கலம், காங்கயம், குண்டடம், வெள்ளகோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகா் சிலைகள் வரும் வியாழக்கிழமையும், தாராபுரம், உடுமலை, பல்லடம், அவிநாசி பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்படும் சிலைகள் வரும் வெள்ளிக்கிழமையும் விசா்ஜனம் செய்யப்படவுள்ளதாக இந்து முன்னணி மாநிலச் செயலாளா் ஜெ.எஸ்.கிஷோா்குமாா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com