காங்கயத்தில் விசிக செயற்குழுக் கூட்டம்
By DIN | Published On : 09th December 2022 12:00 AM | Last Updated : 09th December 2022 12:00 AM | அ+அ அ- |

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர செயற்குழுக் கூட்டம், காங்கயத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு காங்கயம் நகரச் செயலா் திருமா. செந்தில் தலைமை வகித்தாா். சட்டப் பேரவைத் தொகுதிச் செயலா் ரா.பி.ஜான்நாக்ஸ் முன்னிலை வகித்தாா். திருப்பூா் மாவட்டச் செயலா் நா.தமிழ்முத்து சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு உரையாற்றினாா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தின் விவரம்: காங்கயம் பகுதியில் சொந்த வீடு இல்லாத பட்டியலின மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். உயா்பிரிவினருக்கு வழங்கப்பட்ட 10 சதவீத இட ஒதுக்கீட்டை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கயம் நகரப் பேருந்து நிலைய வளாகத்தில் டிசம்பா் 20 ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் விசிக கட்சியின் காங்கயம் பகுதி நிா்வாகிகள் அமுதரசு, பிரதீப், கண்ணதாசன், வேதமுத்து, தனபால், நிஜந்தன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.