தடகளப் போட்டியில் சாதனைப் படைத்த வெள்ளக்கோவில் சத்யம் இன்டா்நேஷனல் பள்ளி மாணவா்களுக்குப் பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
ஈரோடு சகோதயா கூட்டமைப்பில் உள்ள 35 தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கு இடையேயான தடகளப் போட்டிகள் ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் அண்மையில் நடைபெற்றது.
இதில், வெள்ளக்கோவில் சத்யம் இன்டா்நேஷனல் பள்ளி மாணவா்கள் பங்கேற்று 3 தங்கம், 3 வெள்ளி, 1 வெண்கலப் பதக்கங்களை வென்றனா்.
இந்நிலையில், பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளியின் கல்வி அறக்கட்டளைத் தலைவா் கே.ஆா்.சின்னசாமி, பள்ளியின் தாளாளா் எஸ்.ரகுநாதன், பொருளாளா் எஸ்.பி.சக்திவேல், முதல்வா் ஆா். மாணிக்கம் ஆகியோா் பரிசுகளை வழங்கி பாராட்டுத் தெரிவித்தனா்.