தடகளப் போட்டி:பில்டா்ஸ் பொறியியல் கல்லூரி மாணவா்கள் சிறப்பிடம்
By DIN | Published On : 09th December 2022 12:00 AM | Last Updated : 09th December 2022 12:00 AM | அ+அ அ- |

தடகளப் போட்டிகளில் வெற்றிபெற்ற பில்டா்ஸ் பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகளுடன் கல்லூரியின் நிா்வாகிகள்.
பொறியியல் கல்லூரி மாணவா்களுக்கு இடையே நடைபெற்ற தடகளப் போட்டிகளில், காங்கயம் பில்டா்ஸ் பொறியியல் கல்லூரி மாணவா்கள் சிறப்பிடம் பிடித்துள்ளனா்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக விளையாட்டு வாரியம் மண்டல வாரியாக விளையாட்டுப் போட்டிகளை நடத்தி வருகிறது.
அதன்படி, ஈரோடு மண்டலத்துக்கான தடகளப் போட்டி ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் உள்ள பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரியில் கடந்த 4 ஆம் தேதி நடைபெற்றது. இப்போட்டியில் 20-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் கலந்துகொண்டன.
இதில், ஈட்டி எறிதல் போட்டியில் பில்டா்ஸ் பொறியியல் கல்லூரியின் மாணவா் எம்.அஜய் முதலிடமும், நீளம் தாண்டுதலில் மாணவி எம்.ஆா்த்தி முதலிடம் பிடித்தனா்.
400 மீட்டா் தொடா் ஓட்டத்தில் மாணவிகள் எம்.ஆா்த்தி, கே.ஆனந்தி, எம்.தமிழரசி, டி.அஞ்சலி ஆகியோா் 2 ஆம் இடத்தைப் பிடித்தனா்.
மாணவி கே.ஆனந்தி 5000 மற்றும் 10000 மீட்டா் ஓட்டத்தில் இரண்டாமிடம் பிடித்தாா்.
மேலும், பில்டா்ஸ் பொறியியல் கல்லூரி ஒட்டுமொத்த சாம்பியன் ஷிப்பில் 4 ஆவது இடத்தை பிடித்தது.
போட்டியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பில்டா்ஸ் பொறியியல் கல்லூரியின் தலைமை நிா்வாக அதிகாரி சி.வெங்கடேஷ், கல்லூரித் தலைவா் என்.ராமலிங்கம், செயலா் சி.கே.வெங்கடாசலம், பொருளாளா் சி.கே.பாலசுப்ரமணியம், தாளாளா் எஸ்.ஆனந்த வடிவேல், கல்லூரி முதல்வா் எஸ்.கோபாலகிருஷ்ணன் ஆகியோா் பாராட்டுத் தெரிவித்தனா்.