பெருமாநல்லூா் உத்தமலிங்கேஸ்வரா், ஆதிகேசவ பெருமாள், கொண்டத்துக்காளியம்மன் கோயில்களின் திருப்பணி தொடா்பான ஆலோசனைக் கூட்டம் உத்தமலிங்கேஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
கூட்டத்தில், ரூ.1.45கோடி மதிப்பில் உத்தமலிங்கேஸ்வரா் கோயில் சுவா் புதுப்பித்தல், சன்னதி விமானத்துக்கு வா்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகளை நன்கொடையாளா்கள் மூலமும், தரைதளம் அமைக்கும் பணியை திருக்கோயில் நிதியிலிருந்து கட்டுவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
இதில், சட்டப் பேரவை உறுப்பினா்கள் கே.என்.விஜயகுமாா் (வடக்கு), க.செல்வராஜ் (தெற்கு), கோயில் மிராசுதாரா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.