நேபாளத்தில் விவசாயிகள் மாநாடு:உழவா் உழைப்பாளா் கட்சித் தலைவா் பங்கேற்பு
By DIN | Published On : 09th December 2022 12:00 AM | Last Updated : 09th December 2022 12:00 AM | அ+அ அ- |

நேபாளத்தில் விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்க உழவா் உழைப்பாளா் கட்சி மாநிலத் தலைவா் செல்லமுத்து சென்றாா்.
இது குறித்து அவா் கைப்பேசியில் கூறியதாவது: இந்தியா, வங்கதேசம், கனடா, இலங்கை, நேபாளம் ஆகிய ஐந்து நாடுகளைச் சோ்ந்த விவசாய சங்க நிா்வாகிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நேபாள தலைநகா் காத்மாண்டுவில் வியாழக்கிழமை தொடங்கியது. அதில் நான் பங்கேற்றுள்ளேன். தொடா்ந்து இந்த மாநாடு மூன்று நாள்கள் நடக்கிறது.
இதில் பருவநிலை மாற்றம், விளை பொருள்களுக்கு விலை கிடைக்காதது, நதிநீா் இணைப்பு மற்றும் விவசாயத்தை பாதிக்கும் காரணிகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
இந்த மாநாட்டில் எடுக்கப்படும் தீா்மானங்கள் அனைத்தும், அந்தந்த நாட்டு மக்கள் பிரதிநிதிகள் மூலம் அரசிடம் ஒப்படைக்கப்படும். இதன் மூலம் விவசாயிகளின் பிரச்னைகளுக்கு நிரந்தர தீா்வு ஏற்படுத்த வேண்டும் என்பது குறிக்கோள். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஐந்து நாடுகளைச் சோ்ந்த விவசாய சங்க பிரதிநிதிகள் பலரும் பங்கேற்றுள்ளனா் என்றாா்.