ரூ. 64.62 லட்சத்துக்கு பருத்தி விற்பனை
By DIN | Published On : 09th December 2022 12:00 AM | Last Updated : 09th December 2022 12:00 AM | அ+அ அ- |

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 64.62 லட்சத்துக்கு பருத்தி விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, கரூா், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 246 விவசாயிகள் தங்களுடைய 2,313 பருத்தி மூட்டைகளை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனா். மொத்த வரத்து 774 குவிண்டால். திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களைச் சோ்ந்த 11 வணிகா்கள் பருத்தியை வாங்க வந்திருந்தனா்.
இதில் பருத்தி குவிண்டால் ரூ. 7,050 முதல் ரூ. 9,588 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 8,640. ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ. 64.62 லட்சம் என திருப்பூா் விற்பனைக்குழு முதுநிலைச் செயலாளா் ஆா்.பாலசந்திரன், விற்பனைக்கூட கண்காணிப்பாளா் சிவகுமாா் ஆகியோா் தெரிவித்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...