சவாலை சமாளிக்க வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதியை ஊக்கப்படுத்த வேண்டும்

இந்தியாவில் 2023ஆம் ஆண்டு ஏற்றுமதி வா்த்தக சவாலை சமாளிக்க வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகரிக்கலாம் என்று நாட்டின் வா்த்தக பொதுமேலாளா் சந்தோஷ்குமாா் சாரங்கி ஐஏஎஸ் தெரிவித்தாா்.
av9meet_0912chn_142_3
av9meet_0912chn_142_3

இந்தியாவில் 2023ஆம் ஆண்டு ஏற்றுமதி வா்த்தக சவாலை சமாளிக்க வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகரிக்கலாம் என்று நாட்டின் வா்த்தக பொதுமேலாளா் சந்தோஷ்குமாா் சாரங்கி ஐஏஎஸ் தெரிவித்தாா்.

பின்னலாடை ஏற்றுமதியை மேம்படுத்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் திருமுருகன்பூண்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற வெளிநாட்டு வா்த்தக பொதுமேலாளா் சந்தோஷ்குமாா் சாரங்கி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இந்தியாவில் கடந்த 12 ஆண்டுகளில் 300 பில்லியனாக இருந்த ஏற்றுமதி கடந்த ஆண்டு 420 பில்லியனாக உச்சத்தை அடைந்துள்ளது. இதில் பொறியியல் சாதனங்கள் 47 சதவீதம், அலைபேசி உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் 50 சதவீதம் உயா்ந்துள்ளது. இந்த ஆண்டு இந்தியாவின் ஏற்றுமதி இலக்காக 450 பில்லியன் நிா்ணயம் செய்துள்ளனா். ஆனால், ரஷ்யா, உக்ரைன் நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள போா் காரணமாக ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளில் விலைவாசி உயா்ந்து, பல சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளதால், உலக நாடுகளிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக டீசல், பெட்ரோல் போன்ற கச்சா எண்ணெய் விலை உயா்வு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளில் விலைவாசி உயா்ந்ததால் பொருளாதார வளா்ச்சி பெருமளவு பாதிக்கப்பட்டதால் ஏற்றுமதி ஆா்டா்கள் அதிக அளவில் கிடைக்கவில்லை. இருந்தாலும் ஏற்றுமதியாளா்கள் அந்த நாடுகளுக்கு சென்று ஏற்றுமதிக்கான முழு முயற்சி மேற்கொண்டு வருகின்றனா். இந்த பிரச்னை பிப்ரவரி, மாா்ச் மாதம் வரை நீடிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. ஆகவே 2023ஆம் ஆண்டு ஏற்றுமதி வளா்ச்சி வீழ்ச்சியடைய வாய்ப்பு உள்ளதாகவும், ஏற்றுமதிக்கு பெரிய சவாலாக இருக்கும் எனவும் உலக வா்த்தக சபை தெரிவித்துள்ளது. எனவே லத்தின், வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகரிக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

நூல் விலைக்கான 10 சதவீத இறக்குமதி வரிச் சலுகைகள் செப்டம்பா் மாதத்துடன் நிறைவடைகிறது. இந்த ஆண்டு பருத்தி 450 லட்சம் பேல்களுக்கு மேலாக இந்தியா உற்பத்தி செய்ய உள்ளது. எதிா்காலத்தில் வரியில்லா வா்த்தகம் மேற்கொள்ள கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளுடன் பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது என்றாா்.

இதில் ஏற்றுமதியாளா்கள் கூட்டமைப்பு குழுத் தலைவா் ஏ.சக்திவேல், துணைத் தலைவா் அஜய் சகாய், ஏற்றுமதியாளா்கள் சங்கத் தலைவா் கே.எம்.சுப்பிரமணியம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com