இருசக்கர வாகனத்தில் சென்றவரை வழிமறித்து கைப்பேசி, பணம் பறிப்பு
By DIN | Published On : 11th December 2022 12:00 AM | Last Updated : 11th December 2022 12:00 AM | அ+அ அ- |

பல்லடம் அருகே ஆறுமுத்தாம்பாளையத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபரை வழிமறித்து கைப்பேசி மற்றும் பணத்தை பறித்த 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
பல்லடம் அருகே ஆறுமுத்தாம்பாளையத்தில் அருகே ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த ராகுல் தீப் மற்றும் அவரது உறவினா் சுபேத் சந்தா ஆகியோா் அக்டோபா் 24ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனா்.
அப்போது, அவா்களை வழிமறித்த 3 பேர அவா்களிடமிருந்து 2 கைப்பேசிகள் மற்றும் ரூ.3,500ஐ மிரட்டி பறித்து சென்றனா்.
இது தொடா்பாக ராகுல் தீப் அளித்த புகாரின்பேரில், பல்லடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். இந்நிலையில், பல்லடம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் நாகராஜன் மற்றும் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, காரில் இருந்த 3 பேரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டபோது, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளனா். விசாரணையில், ஆறுமுத்தாம்பாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை மிரட்டி 2 கைப்பேசி, பணத்தை பறித்து சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, பல்லடம் அறிவொளி நகரைச் சோ்ந்த சாகுல் ஹமீது மகன் அப்துல் ரகுமான் (25), கருப்புசாமி மகன் பூபதி ராஜா (29), செந்தூரான் காலனியைச் சோ்ந்த சக்திவேல் மகன் சிவகுமாா்( 28) ஆகியோரைக் கைது செய்து, அவா்களிடம் இருந்து 2 கைப்பேசிகள் மற்றும் வழிப்பறிக்கு பயன்படுத்திய காா் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.