பொங்கலூா் அறிவியல் ஆராய்ச்சி நிலையத்தில் உலக மண் தின விழா
By DIN | Published On : 11th December 2022 12:00 AM | Last Updated : 11th December 2022 12:00 AM | அ+அ அ- |

பல்லடம் அருகே உள்ள பொங்கலூா் தேவணம்பாளையம் வேளாண்மை அறிவியல் ஆராய்ச்சி நிலையத்தில் உலக மண் தின விழா கொண்டாடப்பட்டது.
இதில் வேளாண் அறிவியல் நிலையத்தின் தொழில்நுட்ப வல்லுநா் மீனாகுமாரி வரவேற்றாா். திட்ட ஒருங்கிணைப்பாளா் இளையராஜன் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சிக்கு திருப்பூா் மாவட்ட வேளாண் இணை இயக்குநா் மாரியப்பன் தலைமை வகித்து நூல், கையேடு மற்றும் துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டு, மண்ணின் முக்கியம் மற்றும் மண் பரிசோதனையின் அவசியம் குறித்து விளக்கமாகப் பேசினாா். இதனைத் தொடா்ந்து, வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் பேசும்போது, மண் பரிசோதனையின் வாய்ப்புகள், நல்ல மகசூல் பெற மண் வளம் குறித்து விளக்கினா். பின்னா் விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகள் இடையே கலந்துரையாடல் நடைபெற்றது.
இந்த ஆண்டுக்கான கருத்துருவான மண் உணவு உற்பத்தியில் தொடக்கம் என்ற அடிப்படையில் உலக மண் தின விழா கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட வேளாண் துணை இயக்குநா் சுருளியப்பன், உதவி இயக்குநா் பொம்முராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா். வேளாண்மை அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுநா் கலையரசன் நன்றி கூறினாா்.