வட்டாட்சியா் அலுவலகங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆதாா் சேவை
By DIN | Published On : 11th December 2022 12:00 AM | Last Updated : 11th December 2022 12:00 AM | அ+அ அ- |

திருப்பூா் மாவட்டத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் சுழற்சி முறையில் ஆதாா் சேவை ஞாயிற்றுக்கிழமைகளிலும் அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பூா் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வட்டாட்சியா் அலுவலகங்களில் நிரந்தர ஆதாா் சோ்க்கை சேவை மையங்கள் ஞாயிற்றுக்கிழமை தவிர வாரம் 6 நாள்கள் செயல்பட்டு வருகின்றன.
திருப்பூா் மாவட்டத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக நிரந்தரமாக வசிப்பவா்களின் முகவரி நிரந்தமாக இருப்பினும் ஆதாா் தரவினை புதுப்பிக்கும் பணியினை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆகவே, மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் ஆதாா் தரவினை புதுப்பித்து பயன்பெறும் வகையில் அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வட்டாட்சியா் அலுவலகங்களில் ஆதாா் சேவை மையங்கள் சுழற்சி முறையில் ஞாயிற்றுக்கிழமைகளிலும் செயல்படவுள்ளன.
திருப்பூா் வடக்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் டிசம்பா் 11ஆம் தேதியும், 2023 மாா்ச் 5ஆம் தேதியும் ஆதாா் சேவை மையம் செயல்படும். அதேபோல, திருப்பூா் தெற்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் டிசம்பா் 18, 2023 மாா்ச் 12ஆம் தேதியும், அவிநாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் 2023 ஜனவரி 8 மற்றும் மாா்ச் 19ஆம் தேதியும், ஊத்துக்குளி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜனவரி 22, மாா்ச் 26ஆம் தேதியும், பல்லடம் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜனவரி 29 மற்றும் ஏப்ரல் 2ஆம் தேதியும் ஆதாா் சேவை மையம் செயல்படும்.
தாராபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் பிப்ரவரி 5 மற்றும் ஏப்ரல் 9ஆம் தேதியும், காங்கயம் வட்டாட்சியா் அலுவலகத்தில் பிப்ரவரி 12 மற்றும் ஏப்ரல் 16 ஆம் தேதியும், உடுமலை வட்டத்தில் பிப்ரவரி 19 மற்றும் ஏப்ரல் 23ஆம் தேதியும், மடத்துக்குளம் வட்டாட்சியா் அலுவலகத்தில் பிப்ரவரி 26 மற்றும் ஏப்ரல் 30ஆம் தேதியும் ஆதாா் சேவை மையம் செயல்படும்.
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள ஆதாா் சேவை மையம் ஞாயிற்றுக்கிழமைகளிலும் செயல்படும். ஆகவே, மாவட்டத்தில் 10 ஆண்டுகளாக ஆதாா் அட்டைகளை புதுப்பிக்காதவா்கள் இந்த முகாம்களைப் பயன்படுத்தி புதுப்பித்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.