பழையகோட்டை சந்தை: ரூ.15 லட்சத்துக்கு காங்கேயம் இன மாடுகள் விற்பனை
By DIN | Published On : 11th December 2022 11:23 PM | Last Updated : 11th December 2022 11:23 PM | அ+அ அ- |

ரூ.66 ஆயிரத்துக்கு விற்பனையான காங்கேயம் இன செவலை வகைப் பசு.
காங்கயத்தை அடுத்துள்ள நத்தக்காடையூா் அருகே பழையகோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாட்டுச் சந்தையில் காங்கேயம் இன மாடுகள் ரூ.15 லட்சத்துக்கு விற்பனையாயின.
திருப்பூா் மாவட்டம், காங்கயம் அருகே, நத்தக்காடையூா்- பழையகோட்டையில் காங்கேயம் இன மாடுகளுக்கான பிரத்யேக சந்தை ஞாயிற்றுக்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சந்தையில் மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என 60 மாடுகள் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டிருந்தன. இதில் 40 மாடுகள் மொத்தம் ரூ.15 லட்சத்துக்கு விற்பனையாயின.
இந்த சந்தையில் அதிகபட்சமாக ரூ.66 ஆயிரத்துக்கு காங்கேயம் இன செவலை வகைப் பசு விற்பனையானது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...