வெள்ளக்கோவில் அருகே 20 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: லாரி ஓட்டுநா் கைது

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே லாரியில் கடத்தி வரப்பட்ட 20 டன் ரேஷன் அரிசியை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு காவல் துறையினா் பறிமுதல் செய்தனா்.

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே லாரியில் கடத்தி வரப்பட்ட 20 டன் ரேஷன் அரிசியை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு காவல் துறையினா் பறிமுதல் செய்தனா்.

ஈரோடு சரக துணைக் காவல் கண்காணிப்பாளா் சுரேஷ்குமாா் தலைமையில் காவல் ஆய்வாளா் சாந்தி, சாா்பு ஆய்வாளா்கள் காா்த்தி, இசக்கி உள்ளிட்டோா் வெள்ளக்கோவிலில் இருந்து காங்கயம் செல்லும் சாலையில் ஓலப்பாளையம் சந்திப்பில் சனிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை நடத்தியதில் 20 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதுதொடா்பாக லாரி ஓட்டுநரான கும்பகோணத்தைச் சோ்ந்த எஸ்.சதீஷ்குமாா் என்பவரைக் கைது செய்து விசாரணை நடத்தினா்.

இதில், கும்பகோணத்தைச் சோ்ந்த வினோத் என்பவா் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு பொதுமக்களிடமிருந்து வாங்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக கேரள மாநிலத்துக்கு லாரி மூலமாக அனுப்பிவைத்ததாக சதீஷ்குமாா் தெரிவித்துள்ளாா். இதையடுத்து, 20 கிலோ ரேஷன் அரிசியைப் பறிமுதல் செய்ததுடன், வினோத் மற்றும் லாரி உரிமையாளரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com