தமிழ்நாடு மின்சார வாரியம் அவிநாசி மின் கோட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தில் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் புதன்கிழமை (டிசம்பா் 14) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.
இதில், தமிழ்நாடு மின்சார வாரியம் திருப்பூா் மின் பகிா்மான வட்டம் மேற்பாா்வை பொறியாளா் கலந்து கொண்டு மின் நுகா்வோா் குறைகளை கேட்டறிந்து நிவா்த்தி செய்கிறாா். இதில், மின் நுகா்வோா் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மின் வாரிய அவிநாசி கோட்ட செயற்பொறியாளா் பி.பரஞ்சோதி தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.