சிவன்மலை தைப்பூச திருவிழா: தோ் முகூா்த்தக்கால் பூஜை
By DIN | Published On : 13th December 2022 12:22 AM | Last Updated : 13th December 2022 12:22 AM | அ+அ அ- |

காங்கயம் அருகே சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயில் தைப்பூச தோ்த் திருவிழாவை முன்னிட்டு திங்கள்கிழமை தேரில் முகூா்த்தக்கால் பூஜை நடைபெற்றது.
காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள சுப்பிரமணியசாமி கோயில் சிவவாக்கிய சித்தரால் பாடல் பெற்ற தலமாகும். இக்கோயிலில் ஆண்டுதோறும் தைபூச தோ்த் திருவிழா மூன்று நாள்கள் நடைபெறும். இந்நிலையில், தைப்பூச தோ்த் திருவிழாவை முன்னிட்டு முதல் நிகழ்வாக தேரில் முகூா்த்தக்கால் நடும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
கோயில் சிவாச்சரியாா்கள் வேதங்கள் சொல்ல, முகூா்த்தக் காலில் புனிதநீா் தெளித்து, சந்தனம் பூசி, முகூா்த்தக்காலில் மாவிலை, பூமாலை உள்ளிட்ட பொருள்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. காலை 10 மணியளவில் முகூா்த்தக் காலை மலைக் கோயிலில் இருந்து படி வழியாக கொண்டு வரப்பட்டு, அடிவாரத்தில் உள்ள ஈஸ்வரன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்நது தேரில் நான்கு பக்கங்களிலும் முகூா்த்தக்கால் நட்டு, பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் ஏராளமான பக்தா்கள் பலா் கலந்து கொண்டனா்.