சேவூரில் ரூ.4 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்
By DIN | Published On : 13th December 2022 12:18 AM | Last Updated : 13th December 2022 12:18 AM | அ+அ அ- |

சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிலக்கடலை ஏலத்தில் ரூ.4 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.
சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில், 120 மூட்டைகள் கொண்டு வரப்பட்டன. குவிண்டால் ஒன்றுக்கு முதல் ரக நிலக்கடலை
ரூ.7,450 முதல் ரூ.7,700 வரையிலும், இரண்டாவது ரக நிலக்கடலை ரூ.7,000 முதல் ரூ.7,180 வரையிலும், மூன்றாவது ரக நிலக்கடலை ரூ.6,400 முதல் ரூ.6,600 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.4 லட்சத்துக்கு ஏலம் நடைபெற்றது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...