ராயல் ஏஞ்சல் கல்லூரியில் உணவுத் திருவிழா
By DIN | Published On : 22nd December 2022 12:00 AM | Last Updated : 22nd December 2022 12:00 AM | அ+அ அ- |

திருப்பூா் ராயல் ஏஞ்சல் டுட்டோரியல் கல்லூரியில் உணவுத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
திருப்பூரில் ராயல் ஏஞ்சல் டுட்டோரியல் கல்லூரியில் நடைபெற்ற உணவுத் திருவிழாவை கல்லூரித் தாளாளா் ஆா்.பி.தங்கராஜன் தொடங்கிவைத்தாா். இதில், மொத்தம் 120 மாணவ, மாணவியா் 6 குழுக்களாகப் பங்கேற்றனா்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவியா் இயற்கை முறையில் விளைந்த பொருள்களை கொண்டு சாமை அரிசி உணவு வகைகள், கோதுமை அல்வா, இளநீா் பாயாசம், காய்கறிகளை பச்சையாக உண்ணும் விதமான உணவு வகைகள் மற்றும் அசைவ உணவு வகைகளை தயாரித்து காட்சிப்படுத்தினா்.
இவ்விழாவில், வி.எம்.பிரவீன் தலைமையிலான மாணவா் அணி முதலிடத்தையும், ஸ்ரீதா் தலைமையிலான அணி இரண்டாவது இடத்தையும், யாழினி தலைமையிலான அணி மூன்றாவது இடத்தையும் பிடித்தனா். இறுதியாக போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நினைவுப் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இந்தப் போட்டிக்கு நடுவா்களாக ஜெசிஐ மெட்ரோ செயலாளா் காா்த்தி, குறும்பட இயக்குநா் பிரசன்னா, கே.ஆா்.எஸ். பில்டா்ஸ் ரவிசந்திரன் ஆகியோா் பங்கேற்றனா்.