120 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்:3 போ் கைது
By DIN | Published On : 08th February 2022 12:20 AM | Last Updated : 08th February 2022 12:20 AM | அ+அ அ- |

அவிநாசி அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
அவிநாசி சுற்று வட்டாரப் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக அவிநாசி காவல் ஆய்வாளா் கீதாவுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, உதவி ஆய்வாளா்கள் அமல் ஆரோக்கியதாஸ், லோகநாதன் ஆகியோா் கொண்ட குழுவினா் தெக்கலூா் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, கோவையில் இருந்து அவிநாசி நோக்கி வந்த காரை நிறுத்தி விசாரணை நடத்தினா். இதில், காரில் வந்தவா்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனா்.
இதில் சந்தேகமடைந்த போலீஸாா் அவா்களிடம் நடத்திய விசாரணையில், அவா்கள் கோவை, அன்னூா் பகுதியைச் சோ்ந்த செல்வராஜ் (24), கோவை ரத்தனபுரி நலம்பாளையம் பகுதியைச் சோ்ந்த முத்துராஜ் (20) என்பதும்,
இவா்கள் விற்பனை செய்வதற்காக புகையிலைப் பொருள்களை காரில் கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்த 100 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.
இதேபோல, தெக்கலூா் ஓம் ஆதித்யா நகா் பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த நபரிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா் அதே பகுதியைச் சோ்ந்த ஆசிா் (38) என்பதும், புகையிலைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து ஆசிரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 20 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...