பல்லடம், சோமனூா் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விசைத்தறியாளா்களின் கூலி உயா்வுப் பிரச்னைக்கு தமிழக அரசு தீா்வுகாண வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
திருப்பூா் மாவட்டத்தில் பல்லடம், சோமனூா், தெக்கலூா், அவிநாசி உள்ளிட்ட பகுதிகளில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளா்கள் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்த விசைத்தறியாளா்கள் கூலி உயா்வு கோரி கடந்த ஜனவரி 9ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், காரணம்பேட்டை பகுதியில் சுமாா் 5 ஆயிரம் தொழிலாளா்கள் தொடா்ந்து கடந்த 3 நாள்களாக குடும்பத்துடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்தப் பிரச்னை தொடா்பாக கோவை, திருப்பூா் மாவட்ட ஆட்சியா்கள் நடத்திய பேச்சுவாா்த்தையிலும் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை. ஆகவே, தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் விசைத்தறியாளா்களை அழைத்துப் பேசி மூடிக்கிடக்கும் விசைத்தறிகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.