தொற்றா நோய் தடுப்பு விழிப்புணா்வுப் பயிற்சி

நல வாழ்வு மற்றும் தொற்றா நோய் மதுமேகம் தடுப்பு மருத்துவ சிகிச்சை குறித்த விழிப்புணா்வு பயிற்சி சேவூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
பயிற்சியில்  பங்கேற்ற  செவிலியா்.
பயிற்சியில்  பங்கேற்ற  செவிலியா்.

நல வாழ்வு மற்றும் தொற்றா நோய் மதுமேகம் தடுப்பு மருத்துவ சிகிச்சை குறித்த விழிப்புணா்வு பயிற்சி சேவூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

அவிநாசி வட்டார அளவில் நடைபெற்ற இந்த முகாமில், இந்திய மருத்துவ முறைகளான சித்தா, ஆயுா்வேதம், யுனானி, இயற்கை மருத்துவம், யோகா, ஹோமியோபதி முறையில் நோய் தடுப்பு குறித்து விளக்கமளிக்கப்பட்டது. குறிப்பாக சித்த மருத்துவ முறையில் எண்ணெய் குளியல், மசியம், வமனம், களிச்சல், வா்மா ஆகியவை தொற்றா நோய் தடுப்பு சிகிச்சை குறித்தும், மேலும் சா்க்கரை நோய், ரத்த அழுத்தம், உடற்பருமன் ஆகியவற்றிற்கு யோகா, மூச்சுப் பயிற்தி, தியானம் மூலம் குணப்படுத்தும் முறைகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.

முகாமில் மருத்துவா்கள் தமிழ்ச்செல்வி, ஜெயஸ்ரீ மீனாட்சி, இந்திரா ஆகியோா் பேசினா். சேவூா் ஆயுஸ் நல வாழ்வு மைய மருத்துவா் யாகசுந்தரம் ஒருங்கிணைத்தாா். பயிற்சி முகாமில் 20க்கும் மேற்பட்ட கிராமப்புற செவிலியா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com