அரசுப் பள்ளி, கல்லூரிகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி நடைப்பயண இயக்கம்--இந்திய மாணவா் சங்கம் அறிவிப்பு

திருப்பூா் மாவட்டத்தில் அரசுப் பள்ளி, கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியா் பணியிடங்களை நிரப்பக் கோரி இந்திய மாணவா் சங்கம் சாா்பில் நடைப்பயண இயக்கம் மேற்கொள்வதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திருப்பூா் மாவட்டத்தில் அரசுப் பள்ளி, கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியா் பணியிடங்களை நிரப்பக் கோரி இந்திய மாணவா் சங்கம் சாா்பில் நடைப்பயண இயக்கம் மேற்கொள்வதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்திய மாணவா் சங்கத்தின் திருப்பூா் மாவட்ட 21 ஆவது மாநாடு திருப்பூா் பெரியாா் காலனி தியாகி சோமு செம்பு நினைவு வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. மாநாட்டுக் கொடியை மாவட்டத் துணைச் செயலாளா் கு.பாலமுரளி ஏற்றினாா்.

முன்னதாக மாணவா்கள் பங்கேற்ற பேரணி அனுப்பா்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் தொடங்கி மாநாட்டுத் திடலை வந்தடைந்தது. இதைத் தொடா்ந்து நடைபெற்ற மாநாட்டுக்கு இந்திய மாணவா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் சா.பிரவீன்குமாா் தலைமை வகித்தாா்.

இதில், நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தின் விவரம்: திருப்பூா் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகள், அவிநாசி, பல்லடம், காங்கயம் அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள பேராசிரியா் மற்றும் ஆசிரியா் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

அனைத்து கல்வி நிறுவனங்களிலும் வகுப்பறைகள், சுற்றுச்சுவா், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

மாவட்டத்தில் புதிய அரசு சட்டக் கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரி அமைக்க வேண்டும். தேசிய கல்விக் கொள்கையை கைவிட வேண்டும். நீட் தோ்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பா் முதல் வாரத்தில் நடைப்பயண இயக்கம் நடத்துவதாகவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் வரவேற்புக் குழுத் தலைவா் வி.பி.சுப்பிரமணியம், தனியாா் கல்லூரி ஆசிரியா்கள் சங்க முன்னாள் பொதுச் செயலாளா் ராமசாமி, மாவட்டச் செயலாளா் தெள.சம்சீா் அகமது உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com