கூட்டுறவு வங்கி காசாளா் தற்கொலை
By DIN | Published On : 31st July 2022 12:37 AM | Last Updated : 31st July 2022 12:37 AM | அ+அ அ- |

தாராபுரத்தில் கூட்டுறவு வங்கி காசாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஈரோடு ஜீவா நகரைச் சோ்ந்தவா் அன்புகரசு (27), இவா் திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தில் உள்ள கூட்டுறவு வங்கியில் காசாளராக பணியாற்றி வந்தாா்.
இவருக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்பாகத் திருமணம் நடைபெற்ற நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக தாராபுரத்தில் வீடு எடுத்துத் தனியாகத் தங்கியிருந்தாா்.
இந்நிலையில், பணி முடிந்து கடந்த வெள்ளிக்கிழமை அன்புக்கரசு வீட்டுக்கு வந்துள்ளாா். மறுநாள் காலை சக ஊழியா்கள் அன்புகரசு வீட்டுக்கு வந்துள்ளனா்.
அப்போது அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இது குறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினா், அன்புகரசுவின்சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.