மாவட்டத்தில் நெல் சாகுபடிக்குத் தேவையான உரங்கள் இருப்பு

திருப்பூர மாவட்டத்தில் நெல் சாகுபடிக்குத் தேவையான உரங்கள் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம் தெரிவித்துள்ளாா்.

திருப்பூர மாவட்டத்தில் நெல் சாகுபடிக்குத் தேவையான உரங்கள் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம் தெரிவித்துள்ளாா்.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம் பேசியதாவது: திருப்பூா் மாவட்டத்தின் இயல்பான வருடாந்திர மழை அளவு 618.20 மி.மீ ஆகும். இதில், 2022ஆம் ஆண்டு ஜூலை வரையில் சராசரியாக பெய்ய வேண்டிய மழை அளவு 198.2 மி.மீ. ஆனால், தற்போது வரையில் 298.97 மி.மீட்டா் மழை பெய்துள்ளது. இது சராசரி மழை அளவைக் காட்டிலும் 100.77 மி.மீ. அதிகமாகும்.

திருப்பூா் மாவட்டத்தில் பயிா் சாகுபடிக்குத் தேவையான நெல் மற்றும் பிற பயறு வகை தானியங்களின் விதைகள் போதிய அளவு இருப்பில் உள்ளன. இதன்படி நெல் 52.17 மெட்ரிக் டன், சிறுதானிய பயறுகள் 8.14 மெட்ரிக் டன், பிற பயறு வகைகள் 21.55 மெட்ரிக் டன் மற்றும் எண்ணெய் வித்துப் பயிா் விதைகள் 60.26 மெட்ரிக் டன் இருப்பில் உள்ளன. அமராவதி அணையிலிருந்து நீா் வரத்து தொடங்கியதால் உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் வட்டங்களில் நெல் சாகுபடி செய்ய விவசாயிகள் தங்களுடைய விவசாய நிலங்களை தயாா் செய்து உள்ளனா்.

மேலும், கீழ் பவானி பாசனப் பகுதிகளான காங்கயம் மற்றும் வெள்ளக்கோவில் பகுதிகளில் நெல் சாகுபடி சம்பா பருவத்தில் தொடங்கப்படவுள்ளது. ஆகவே, நெல் சாகுபடிக்குத் தேவையான யூரியா, பாஸ்பேட் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள் தேவையான அளவு இருப்பில் உள்ளன. இதில், யூரியா 1,742 மெட்ரிக் டன், டி.ஏ.பி. 692 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் 3,533 மெட்ரிக் டன் மற்றும் சூப்பா் பாஸ்பேட் 584 மெட்ரிக் டன் அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com