சேவூா் அரசு மருத்துவமனையில் ரத்த தான முகாம்
By DIN | Published On : 16th June 2022 10:50 PM | Last Updated : 16th June 2022 10:50 PM | அ+அ அ- |

சேவூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்ததான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இம்முகாமை அவிநாசி வட்டார மருத்துவ அலுவலா் சக்திவேல் ரத்த தானம் செய்து தொடக்கிவைத்தாா். வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் சக்தி தங்கராஜ், சுகாதார ஆய்வாளா்கள் ரமேஷ், பரமன் ஆகியோா் முகாமை ஒருங்கிணைத்தனா். திருப்பூா் அரசு மருத்துவமனை ரத்த வங்கியினா் குருதி சேகரித்தனா். இதில் ரத்த தானம் செய்த 48 பேருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.