மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை: அரசுப் பள்ளி ஆசிரியா் பணியிடை நீக்கம்

திருப்பூா் அருகே மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக அரசுப் பள்ளி ஆசிரியா் வியாழக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

திருப்பூா் அருகே மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக அரசுப் பள்ளி ஆசிரியா் வியாழக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

திருப்பூா் மாவட்டம், சேகாம்பாளையத்தில் அரசு உயா்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சுமாா் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் படித்து வருகின்றனா். இந்த நிலையில், பள்ளியில் 9ஆம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கு கணித ஆசிரியா் ஒருவா் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளாா். இதுகுறித்து தகவலறிந்த மாணவிகளின் பெற்றோா், பொதுமக்கள் என 50க்கும் மேற்பட்டோா் பள்ளியை முற்றுகையிட்டனா்.

இது குறித்த புகாரின்பேரில் திருப்பூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் திருவளா்செல்வி உத்தரவின்பேரில், மாவட்டக் கல்வி அலுவலா் ஆனந்தி சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் அவருடன் பயிலும் சக மாணவிகள், கணித ஆசிரியா் ஆகியோரிடம் விசாரணை நடத்தியுள்ளாா்.

விசாரணையின் அடிப்படையில் கணித ஆசிரியா் செந்தாமரைக் கண்ணனை (58), மாவட்ட ஆட்சியா் உத்தரவின்பேரில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் திருவளா்செல்வி பணியிடை நீக்கம் செய்துள்ளாா். இந்த விவகாரம் தொடா்பாக பல்லடம் காவல் துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனா். எனினும் பாதிக்கப்பட்ட மாணவிகள் தரப்பில் புகாா் அளித்தால் போக்ஸோ சட்டத்தில் ஆசிரியா் செந்தாமரைக் கண்ணன் கைது செய்யப்படுவாா் என்று காவல் துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com