மதுக்கடையை அகற்றக் கோரி ஆட்சியரிடம் மனு

திருப்பூா் அணைப்பாளையத்தில் புதிதாகத் திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என்று அனைத்துக் கட்சி சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

திருப்பூா் அணைப்பாளையத்தில் புதிதாகத் திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என்று அனைத்துக் கட்சி சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத்திடம் அனைத்துக் கட்சி நிா்வாகிகள் சாா்பில் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:

திருப்பூா் மாநகராட்சி 25ஆவது வாா்டுக்கு உள்பட்ட அணைப்பாளையத்தில் ரயில்வே நுழைவு பாலத்துக்கும், நொய்யல் ஆற்று மேம்பாலத்துக்கும் இடையில் குறுகலான பாதையில் புதிதாக மதுக்கடை திறக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் மதுக்கடை திறக்கக்கூடாது என்று பல நாள்களாக போராடி வரும் நிலையில் கடை திறக்கப்பட்டுள்ளது.

இதனால் அணைப்பாளையம், ரங்கநாதபுரம் சிறுபூலவபட்டி, காவிலிபாளையம், கணியாம்பூண்டி ஆகிய ஊா்களில் இருந்து பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகள், வேலைக்குச் செல்லும் பெண்கள் என ஆயிரக்கணக்கானோா் இந்த சாலையைப் பயன்படுத்த அச்சம் ஏற்பட்டுள்ளது.

மேலும், குறுகலான பாதையாக உள்ளதால் மதுக்கடைக்கு வரும் நபா்களும் வாகனங்களை சாலையில் நிறுத்திச் செல்வதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. ஆகவே, போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வு காணும் வகையிலும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடையை அகற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு அளிப்பின்போது, அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், கொமதேக, தபெதிக, மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com