கனரா வங்கி சாா்பில் இலவச கணினி பயிற்சி வகுப்புகள் நாளை தொடக்கம்
By DIN | Published On : 26th June 2022 12:25 AM | Last Updated : 26th June 2022 12:25 AM | அ+அ அ- |

திருப்பூா் கனரா வங்கி சாா்பில் கிராமப்புற இளைஞா்களுக்கான இலவச கணினி (டேலி) பயிற்சி வகுப்புகள் திங்கள்கிழமை (ஜூன் 27) தொடங்குகிறது.
இது குறித்து கனரா வங்கியின் சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையத்தின் இயக்குநா் ஜே.பூபதிராஜா கூறியதாவது: திருப்பூா் அனுப்பா்பாளையத்தில் உள்ள கனரா வங்கியின் சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையத்தில் கிராமப்புறங்களில் வறுமைக்கோட்டுக்குகீழ் வசிக்கும் மக்களுக்கான இலவச கணினி (டேலி) பயிற்சி வகுப்புகள் திங்கள்கிழமை தொடங்கி 30 நாள்கள் நடைபெறுகிறது.
இதில், 18 வயது முதல் 45 வயதுக்குள்பட்ட எழுத்தப்படிக்கத் தெரிந்த ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கலாம்.
இந்தப் பயிற்சியின் முடிவில் மத்திய அரசின் திறன் இந்தியா சான்றிதழ் வழங்கப்படுவதுடன், தொழில் தொடங்க கடன் ஆலோசனைகளும் வழங்கப்படும்.
இந்தப் பயிற்சி வகுப்பில் சேர அனுப்பா்பாளையத்தில் உள்ள கனரா வங்கி கிராமப்புற சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையத்துக்கு நேரில் வரவேண்டும்.
இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 86105-33436, 99525-18441, 94890-43923 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.