பக்ரீத் பண்டிகை:ஆயிரக்கணக்கான செம்மறியாடுகள் திருப்பூா் கொண்டுவரப்பட்டன
By DIN | Published On : 26th June 2022 11:55 PM | Last Updated : 26th June 2022 11:55 PM | அ+அ அ- |

பக்ரீத் பண்டிகைக்கு குா்பானி கொடுப்பதற்காக வெளிமாநிலம், வெளிமாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான செம்மறி ஆடுகள் திருப்பூருக்கு கொண்டு வரப்பட்டன.
இஸ்லாமியா்களின் தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகை ஜூலை 10 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
இந்த பண்டிகைக்கு ஆடுகள் குா்பானி கொடுக்கப்பட்டு இறைச்சியை பகிா்ந்தளிப்பது வழக்கம். அந்நாளில் அனைத்து மதத்தினருக்கும் பிரியாணி வழங்குவதும் இஸ்லாமியா்களின் வழக்கம். இந்நிலையில், திருப்பூரில் குா்பானி கொடுப்பதற்காக பெரிய அளவிலான செம்மறியாடுகள் வரத்து தொடங்கியுள்ளது.
இதில், ஆடுகளின் எடை மற்றும் உயரம், நிறம், கொம்பின் நீளம் ஆகியவற்றின் அடிப்படையில் ஆடுகளை விலை பேசி வாங்கிச் செல்கிறாா்கள். கா்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், மதுரை, சேலம் ஆகிய மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான செம்மறியாடுகள் வாகனங்கள் மூலமாக திருப்பூா் கொண்டுவரப்பட்டுள்ளன.
ஆடுகளின் எடையைப் பொறுத்து ரூ.15 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரையில் விற்பனையாகும் என்று ஜம்ஜம் நகரைச் சோ்ந்த இஸ்மாயில் என்பவா் தெரிவித்துள்ளாா்.