முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்
1336 ஆய்வக நுட்புனர்களை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை
By DIN | Published On : 14th March 2022 08:49 AM | Last Updated : 14th March 2022 08:49 AM | அ+அ அ- |

அவிநாசி: பொதுசுகாதாரத் துறையில் உள்ள 1336 ஆய்வக நுட்புனர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு ஆய்வக நுட்புனர் ஒன்றியத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆய்வக நுட்புனர் தின விழாவையொட்டி, தமிழ்நாடு ஆய்வக நுட்புனர் ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் அவிநாசி அரசு அலுவலர் ஒன்றிய வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
இதற்கு தமிழ்நாடு ஆய்வக நுட்புனர் ஒன்றிய தலைவர் கார்த்திகேயன் வெங்கடேசன் தலைமை வகித்தார். மாநில பொருளாளர் மோகன்ராஜ், மாநில மகளிரணித் தலைவர் கார்த்தியாயினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் 7 முறையாக அரசு அலுவலக ஒன்றிய தலைவராக பதவியேற்ற சண்முக ராஜன், மாநில செயலாளர் கார்த்திகேய வெங்கடேசன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.
மேலும் மாநிலம் முழுவதும் உள்ள 1336 ஆய்வக நுட்புனர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகளாக மாவட்டத் தலைவர் விஜயலட்சுமி, மாவட்ட செயலாளர் முத்துக்குமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுகுணா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.