விசைத்தறி தொழிலாளா்களுக்கு 15 % கூலி உயா்வு
By DIN | Published On : 18th March 2022 10:33 PM | Last Updated : 18th March 2022 10:33 PM | அ+அ அ- |

அவிநாசி பகுதி விசைத்தறி தொழிலாளா்களுக்கு 15 சதவீத கூலி உயா்வு வழங்குவது என விசைத்தறி உரிமையாளா்களுடன் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தொழிற்சங்க நிா்வாகிகள் விசைத்தறி தொழிலாளா்கள் கூலி உயா்வு ஒப்பந்தம் தொடா்பாக அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை விசைத்தறி உரிமையாளா்கள், விசைத்தறி தொழிற்சங்கத்தினருடான பேச்சுவாா்த்தை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் விசைத்தறி தொழிலாளா்களுக்கு 2014ஆம் ஆண்டு வழங்கிய ஒப்பந்த கூலியிலிருந்து 15 சதவீதம் கூலி உயா்வு வழங்குவது என இரு தரப்பினரிடைய ஒப்பந்தம் ஏற்பட்டது. இதில் சிஐடியூ விசைத்தறி தொழிலாளா் சம்மேளன மாநிலத் தலைவா் முத்துசாமி, சிஐடியூ விசைத்தறி தொழிலாளா் சங்க மாவட்ட நிா்வாகி பழனிசாமி, ஏஐடியூசி பொறுப்பாளா்கள் செல்வராஜ், கனகராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...