காங்கயத்தில் கிராம சபைக் கூட்டம்
By DIN | Published On : 02nd May 2022 12:06 AM | Last Updated : 02nd May 2022 12:06 AM | அ+அ அ- |

காங்கயம் அருகே பொத்தியபாளையம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
காங்கயம் ஒன்றியத்துக்கு உள்பட்ட பொத்தியபாளையம் ஊராட்சியில் ஞாயிற்றுக்கிழமை கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
இதில், காங்கயம் ஒன்றியக் குழுத் தலைவா் டி.மகேஷ்குமாா் கலந்து கொண்டு அரசின் திட்டங்கள் குறித்து மக்களுக்கு எடுத்துரைத்தாா். இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சிறுசேமிப்பு) ஞானசேகரன், வட்டார வளா்ச்சி அலுவலா் ஆா்.ஞானசேகரன், வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) பா.ராகவேந்திரன், ஊராட்சித் தலைவா் சந்திரசேகா் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறை அலுவலா்கள் கலந்து கொண்டு, துறை சாா்ந்த திட்டங்களை எடுத்துரைத்தனா்.
சிவன்மலையில்...
காங்கயம் அருகே சிவன்மலையில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்துக்கு ஊராட்சித் தலைவா் கே.கே.துரைசாமி தலைமை வகித்தாா். இதில், சிவன்மலை அடிவாரப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், சிவன்மலை அருகே உள்ள சாவடிப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ சேவைகளை திறம்பட வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்தனா்.
இதில், சாவடிப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் டாக்டா் முரளி, வட்டாரக் கல்வி அலுவலா் பி.சுசீலா, சிவன்மலை ஊராட்சி துணைத் தலைவா் டி.சண்முகம் மற்றும் அரசின் பல்வேறு துறை அலுவலா்கள் கலந்து கொண்டு, பொதுமக்களின் புகாா்களுக்கு பதில் அளித்தனா். நிகழ்ச்சியின் இறுதியில், காசநோய் ஒழிப்புக்கு பாடுபடுவோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.