அவிநாசி அருகே மங்கரசவலையபாளையத்தில் எல்லோருக்கும் எல்லாமும் அறக்கட்டளையின் 2ஆம் ஆண்டு துவக்க விழாவையொட்டி இலவச பொது மருத்துவப் பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மங்கரசுவலையபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற முகாமை காவல் துணைக் கண்காணிப்பாளா் பவுல்ராஜ் துவக்கிவைத்தாா். அவிநாசி இணைந்த கைகள் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளா் சந்தீப், கோவை சுற்றுச்சூழல் ஆய்வாளா் சதாசிவம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முகாமை மருத்துவா்கள் குகப்பிரியா, கோமதி, பொறுப்பாளா் மல்லிகை செல்வராஜ், ஊராட்சி மன்றத் தலைவா் வரதராஜன் ஆகியோா் ஒருங்கிணைத்தனா். இதில் 700க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு பொது மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டனா்.