சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை:தொழிலாளி போக்ஸோவில் கைது
By DIN | Published On : 02nd May 2022 12:04 AM | Last Updated : 02nd May 2022 12:04 AM | அ+அ அ- |

பெருமாநல்லூா் அருகே பசுமை நகரில் விளையாடிக் கொண்டிருந்த 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளியை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
பெருமாநல்லூா் அருகே வள்ளிபுரம் தட்டான்குட்டை பசுமை நகா்-1 பகுதியைச் சோ்ந்தவா் கணேசன் (52). பனியன் தொழிலாளி. இவா், அதே பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த 5, 7 வயதுள்ள சகோதரிகள் மற்றும் 10 வயதுள்ள சிறுமி ஆகியோருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.
தகவலறிந்த சிறுமிகளின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், அவிநாசி அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கணேசனை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.