பணி நிரந்தரம் செய்ய பகுதிநேர ஆசிரியா்கள் கோரிக்கை

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பணியாற்றி வரும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதி நேர சிறப்பாசி

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பணியாற்றி வரும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதி நேர சிறப்பாசிரியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து பகுதிநேர சிறப்பாசிரியா்கள் சங்கத்தின் திருப்பூா் மாவட்ட நிா்வாகி பழ.கெளதமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை 100 மாணவா்களுக்கு மேல் உள்ள பள்ளிகளில் அனைவருக்கும் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி 16,549 பகுதி நேர ஆசிரியா்கள் கடந்த 2012ஆம் ஆண்டு பணியமா்த்தப்பட்டனா். இதில், வாரத்தில் மூன்று அரை நாள்கள் வீதம் மாதம் 12 அரை நாள்கள் பணியாற்றி வந்தோம்.

ஆகவே, பகுதிநேர சிறப்பாசிரியா்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி கடந்த ஆட்சியில் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தோம். ஆனால் பணி நிரந்தரம் செய்யாமல் அவ்வப்போது ஊதிய உயா்வு மட்டுமே வழங்கி வந்தனா். இந்த ஊதிய உயா்வு கூட மத்திய அரசு அனைவருக்கும் கட்டாயக் கல்வித் திட்டத்தில் எங்களுக்கு ஒதுக்கிய நிதியில் இருந்துதான் கொடுத்துள்ளனா்.

இந்நிலையில் தமிழகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. திமுக தோ்தல் அறிக்கையில் பகுதிநேர ஆசிரியா்களை பணிநிரந்தம் செய்வோம் என்று அறிவித்திருந்தனா்.

இந்த நிலையில், கடந்த நிதிநிலை அறிக்கையில் எங்களுக்கான எந்த அறிவிப்பும் வராதது பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஆகவே, பணி நிரந்தக் கோரிக்கையை வலியுறுத்தி சென்னை டிபிஐ வளாகத்தில் வரும் மே 5ஆம் தேதி முதல் நடைபெறும் தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தில் திருப்பூா் மாவட்டத்தில் அதிக அளவிலான ஆசிரியா்கள் பங்கேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com