வாகனத்தில் இருந்து தவறி விழுந்த பெண் பலி
By DIN | Published On : 16th May 2022 07:38 AM | Last Updated : 16th May 2022 07:38 AM | அ+அ அ- |

வெள்ளக்கோவில் அருகே வாகனத்தில் இருந்து தவறி விழுந்த பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
காங்கயம் சிவன்மலை சரவணா நகரைச் சோ்ந்தவா் ராசு மனைவி நாச்சாத்தாள் (55). கட்டடத் தொழிலாளி. கணவன், மனைவி இருவரும் வெள்ளக்கோவில் உத்தமபாளையத்தில் உள்ள உறவினா் வீட்டுக்கு வந்து விட்டு இருசக்கர வாகனத்தில் காங்கயம் நோக்கி ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தனா்.
அப்போது உத்தமபாளையம் - ஓலப்பாளையம் சாலை கொல்லம்பாலி முருகன் கோயில் அருகே வரும்போது பின்னால் அமா்ந்திருந்த நாச்சாத்தாள் நிலை தடுமாறி கீழே விழுந்தாா். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...