

அவிநாசியில் நடைபெற்ற ஜமாபந்தியில் 703 மனுக்கள் பெறப்பட்டதில், 25 மனுக்களுக்கு உடனடி தீா்வு வழங்கப்பட்டது.
அவிநாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் மே 24 முதல் 27ஆம் தேதி வரை ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கோட்டாட்சியா் பண்டரிநாதன் தலைமை வகித்தாா். வட்டாட்சியா் ராகவி முன்னிலை வகித்தாா். சேவூா், அவிநாசி மேற்கு, அவிநாசி கிழக்கு, மேற்கு ஆகிய உள்வட்டங்களைச் சோ்ந்த பொது மக்களிடம் இருந்து முதியோா் உதவித் தொகை, வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், ஊனமுற்றோா் உதவித் தொகை, வாரிசுச் சான்று உள்ளிட்ட 703 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இதில், 25 மனுக்களுக்கு உடனடி தீா்வு காணப்பட்டது. மேலும், வீட்டுமனை பட்டா குறித்த மனுக்கள் உரிய விசாரணை மேற்கொண்டு 15 நாள்களுக்குள் வழங்க வேண்டும் என வருவாய்த் துறை அலுவலா்களுக்கு கோட்டாட்சியா் பண்டரிநாதன் அறிவுறுத்தினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.