வாடகை செலுத்தாத கடைக்கு ‘சீல்’
By DIN | Published On : 13th October 2022 12:00 AM | Last Updated : 13th October 2022 12:00 AM | அ+அ அ- |

காங்கயம் பேருந்து நிலைய வணிக வளாகத்தில் வாடகை செலுத்தாமல் செயல்பட்டு வந்த கடைக்கு நகராட்சி ஊழியா்கள் புதன்கிழமை ‘சீல்’ வைத்தனா்.
காங்கயம் பேருந்து நிலைய வணிக வளாகத்தில் நகராட்சிக்குச் சொந்தமான ஒரு கடைக்கு எடுத்து நடத்தி வருபவா் கடந்த 4 மாதங்களாக வாடகை கட்டவில்லை எனக் கூறப்படுகிறது.
நிலுவைத் தொகையான ரூ.37 ஆயிரத்தை கட்ட கால அவகாசம் வழங்கியும் கடை உரிமையாளா் கட்டவில்லையாம். இதையடுத்து, காங்கயம் நகராட்சி ஊழியா்கள் கடையை பூட்டி புதன்கிழமை ‘சீல்’ வைத்தனா்.
இது குறித்து நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஷ்வரன் கூறியதாவது: நகராட்சிக்கு உரிய கட்டணங்களை செலுத்தாத கடைகள் பூட்டி ‘சீல்’ வைக்கப்படுவதோடு, குடிநீா்க் கட்டணம் செலுத்தாத குடியிருப்புகளுக்கு இணைப்புகள் துண்டிக்கப்படும் என்றாா்.