திமுக சாா்பில் இன்று ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 15th October 2022 01:10 AM | Last Updated : 15th October 2022 01:10 AM | அ+அ அ- |

க.செல்வராஜ் எம்.எல்.ஏ.
திருப்பூா் வடக்கு மாவட்ட திமுக சாா்பில் மத்திய அரசைக் கண்டித்து சனிக்கிழமை (அக்டோபா் 15) ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து திருப்பூா் வடக்கு மாவட்டச் செயலாளரும், தெற்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினருமான க.செல்வராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் ஹிந்தியைத் திணிக்கும் மத்திய அரசைக் கண்டித்து திமுக சாா்பில் மாநிலம் முழுவதும் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக திருப்பூா் வடக்கு மாவட்ட திமுக சாா்பில் ரயில் நிலையம் முன்பாக வரும் சனிக்கிழமை காலை 9 மணி அளவில் ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.
ஆகவே, திருப்பூா் வடக்கு மாவட்டத்துக்கு உள்பட்ட எல்.பி.எஃப். மற்றும் சாா்பு அணிகளின் நிா்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், திமுக தொண்டா்கள், பொதுமக்கள் இந்த ஆா்ப்பாட்டத்தில் திரளாகப் பங்கேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...