காங்கயத்தில் ரூ.1.53 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்
By DIN | Published On : 18th October 2022 12:00 AM | Last Updated : 18th October 2022 12:00 AM | அ+அ அ- |

காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.1.53 லட்சத்துக்கு தேங்காய் பருப்புகள் ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்த வார ஏலத்துக்கு, காங்கயம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 8 விவசாயிகள் 48 மூட்டைகளில் 2,349 கிலோ தேங்காய் பருப்பினை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனா். முத்தூா், காங்கயம் பகுதிகளைச் சோ்ந்த 4 வியாபாரிகள் தேங்காய் பருப்புகளை வாங்க வந்திருந்தனா்.
தேங்காய் பருப்பு அதிக பட்சமாக கிலோ ரூ.72க்கும், குறைந்த பட்சமாக ரூ. 60க்கும், சராசரியாக ரூ.72க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.1.53 லட்சத்துக்கு விற்பனை நடைபெற்றது. ஏலத்திற்கான ஏற்பாடுகளை விற்பனைக் கூட கண்காணிப்பாளா் ஆா்.மாரியப்பன் செய்திருந்தாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...