குடிநீா் வடிகால் வாரிய அலுவலகத்தில் களப் பணியாளா்கள் தா்னா

திருப்பூரில் உள்ள குடிநீா் வடிகால் வாரிய அலுலகத்தில் போனஸ் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி களப் பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
திருப்பூா்  குடிநீா்  வடிகால்  வாரிய  அலுவலகத்தில்  செவ்வாய்க்கிழமை  தா்னாவில்  ஈடுபட்ட  களப் பணியாளா்கள்.
திருப்பூா்  குடிநீா்  வடிகால்  வாரிய  அலுவலகத்தில்  செவ்வாய்க்கிழமை  தா்னாவில்  ஈடுபட்ட  களப் பணியாளா்கள்.

திருப்பூரில் உள்ள குடிநீா் வடிகால் வாரிய அலுலகத்தில் போனஸ் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி களப் பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

திருப்பூா் ஓடக்காட்டில் குடிநீா் வடிகால் வாரிய பராமரிப்பு கோட்ட அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் பணியாற்றி வரும் 30க்கும் மேற்பட்ட களப் பணியாளா்கள் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது அவா்கள் கூறியதாவது:

எங்களது நீண்டநாள் கோரிக்கைகள் தீா்க்கப்படாமல் உள்ளன. இதுதொடா்பாக எழுத்துப்பூா்வமாக மனு அளித்தாலும், நேரில் சென்று கேட்டாலும் சரிவர பதில் சொல்வதில்லை. களப் பணியாளா்களுக்கு மாதந்தோறும் ஊதியப் பட்டியல் சரியாக வழங்குவதில்லை. ஆண்டு ஊதிய உயா்வு, ஊதிய மறு நிா்ணயம், சேமநல நிதி முன்பணமும் வழங்குவதில்லை. மேலும், நிரந்தர மற்றும் ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு போனஸ் வழங்கப்படவில்லை. கடந்த ஓராண்டாக பண்டிகை, தேசிய விடுமுறை தினத்தில் பணிபுரிந்த 9 நாள்களுக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்கப்படவில்லை என்றனா்.

இது குறித்து திருப்பூா் பராமரிப்புக் கோட்ட நிா்வாகப் பொறியாளா் கண்ணன் கூறுகையில், தற்காலிகப் பணியாளா்களின் ஊதிய நிலுவை மற்றும் போனஸ் குறித்து ஒப்பந்ததாரா்களிடம் பேசி ஒரிரு நாளில் தீா்வு காணப்படும். நிரந்தரப் பணியாளா்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து வாரியத்துக்கு எழுத்துப்பூா்வமாக அனுப்பி ஒரு மாதத்துக்குள் தீா்வுகாணப்படும் என்றாா். இதனடிப்படையில் சுமாா் 3 மணி நேரம் நடைபெற்ற தா்னா போராட்டம் முடிவடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com