பொங்கலூரில் மரபுசாா் கண்காட்சி
By DIN | Published On : 19th October 2022 12:00 AM | Last Updated : 19th October 2022 12:00 AM | அ+அ அ- |

திருப்பூா் மாவட்ட வேளாண்மை உழவா் நலத் துறை சாா்பில் பொங்கலுாா் வேளாண் அறிவியல் நிலையத்தில் உலக உணவு தினத்தை ஒட்டி மரபுசாா் ஒருங்கிணைப்பு கண்காட்சி மற்றும் பயிா் சாகுபடி தொழில்நுட்ப விளக்க கூட்டம் அண்மையில் நடத்தப்பட்டது.
இதில் சிறுதானியங்கள், நெல், மக்காச்சோளம், பயறு வகைகளின் பாரம்பரிய ரகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு அதன் முக்கியத்துவம் குறித்து விளக்கப்பட்டது. வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை சாா்பில் உழவா் உற்பத்தியாளா் குழுவால் உற்பத்தி செய்யப்பட்ட நீரா பானம், மதிப்புக் கூட்டப்பட்ட உணவுப் பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.
மாவட்ட வேளாண் இணை இயக்குநா் சின்னசாமி, வேளாண்மை துணை இயக்குநா் சுருளியப்பன், பொங்கலுாா் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் இளையராஜன், குண்டடம் மரபு வழி உழவா் உற்பத்தியாளா் சங்கத் தலைவா் சசிகுமாா் உள்பட பலா் பங்கேற்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...