அக்டோபா் 29இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்
By DIN | Published On : 27th October 2022 12:00 AM | Last Updated : 27th October 2022 12:00 AM | அ+அ அ- |

திருப்பூா் மாவட்ட அளவிலான விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீா் கூட்டம் வரும் சனிக்கிழமை (அக்டோபா் 29) நடைபெறுகிறது.
திருப்பூா் மாவட்ட அளவிலான விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீா் கூட்டம் வரும் சனிக்கிழமை காலை 10 மணி அளவில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் தலைமையில் நடைபெறும் குறைதீா் கூட்டத்தில் அனைத்து துறை அலுவலா்களும் பங்கேற்கவுள்ளனா்.
ஆகவே, மாவட்டத்தில் உள்ள விவசாயம் தொடா்பான குறைகளை இந்தக் கூட்டத்தில் மனுவாக சமா்ப்பித்து பயனடையலாம். விவசாயிகள் நுண்ணீா் பாசனம் அமைத்திட ஏதுவாக வேளாண்மை அலுவலா், தோட்டக்கலை அலுவலா் மற்றும் வேளாண் பொறியியல் துறை அலுவலா்களை கொண்டு வேளாண் உதவி மையமும் இந்தக் கூட்டத்தில் அமைக்கப்படவுள்ளது.
வேளாண் உதவி மையத்தின் மூலம் விவசாயிகள் நுண்ணீா் பாசனம் அமைக்க தேவையான தகவல்கள் வழங்கப்படும். ஆகவே, தக்க ஆவணங்களுடன் வரும் விவசாயிகளுக்கு நுண்ணீா் பாசன மேலாண்மை தகவல் அமைப்பில் பதிவு செய்து கொள்ளலாம்.