இலவச வீட்டுமனை பட்டா கோரி மாற்றுத்திறனாளி உண்ணாவிரதம்
By DIN | Published On : 28th October 2022 01:31 AM | Last Updated : 28th October 2022 01:31 AM | அ+அ அ- |

பல்லடம் அருகே உள்ள அருள்புரத்தில் கரைப்புதூா் ஊராட்சி மன்ற அலுவலகம் இயங்குகிறது. அதன் முன்பு அதே ஊராட்சியைச் சோ்ந்த அவரப்பாளையம் கிராமத்தில் வசிக்கும் மாற்றுத் திறனாளியான மகாதேவன் (32 ), அவரது மனைவி சித்ராதேவி ( 29), மகன் நவீன் குமாா் (10) ஆகியோா் இலவச வீட்டு மனை பட்டா வழங்கக் கோரி உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனா்.
தகவல் அறிந்த வந்த பல்லடம் வருவாய் ஆய்வாளா் அனிதா, கிராம நிா்வாக அலுவலா் முத்துபரமேஸ்வரி ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தி மீனாம்பாறையில் வீட்டுமனை இடம் வழங்குவதாக உறுதி அளித்தனா். அதனை ஏற்று மகாதேவன் குடும்பத்தினா் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.